Enable Javscript for better performance
வடபழனியில் வாக்காளர் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி- Dinamani

சுடச்சுட

    

    வடபழனியில் வாக்காளர் விழிப்புணர்வு நடன நிகழ்ச்சி

    By  சென்னை,  |   Published on : 15th April 2016 03:16 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை தியாகராய நகர் சட்டப்பேரவை தொகுதிக்குட்பட்ட வடபழனி பகுதியில் உள்ள மாலில் வியாழக்கிழமை மாலை 100 நடனக் கலைஞர்கள் பங்கேற்ற ஃபிளாஷ் மாப் என்ற வாக்காளர் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
     இந்நிகழ்ச்சியில் "போடுவோம் ஓட்டு, வாங்கமாட்டோம் நோட்டு' என்ற கருத்தை மையமாக் கொண்டு நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
     இதற்கான ஏற்பாடுகள் மற்றும் நடன அமைப்புகளை தியாகராய நகர் சட்டப்பேரவை தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கவிதா ராமு மற்றும் சித்ரா விஸ்வேஸ்வரன் ஆகியோர் ஏற்பாடு செய்ததோடு அவர்களும் குழுவினரோடு இணைந்து நடனமாடினர்.
     சென்னை மாவட்டத்தில் உள்ள 16 சட்டப் பேரவை தொகுதிகளிலும் வாக்குப் பதிவை 100 சதவீதம் உயர்த்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகள், பேரணிகள் ஆகியவை நடத்தப்பட்டு வருகின்றன.
     மேலும் விளம்பரப் பலகைகள், சுவரொட்டிகள், அமைத்தல், கையேடுகள், துண்டறிக்கைகள் வழங்குதல் ஆகியவை மூலம் வாக்களிப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.
     மேலும் விடியோ வாகனம் மூலம் பல்வேறு திரைப்பட நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் நடித்த விழிப்புணர்வு குறும்படங்கள் அனைத்து குடியிருப்பு பகுதிகள்,வணிக வளாகங்கள், பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் அதிகமாக கூடும் இடங்கள் ஆகியவற்றில் திரையிட்டுக் காண்பிக்கப்படுகிறது.
     பொதுமக்களைக் கவரும் வகையிலும், சிறந்த முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் அமைந்துள்ள இந்த நடன நிகழ்ச்சியை மேலும் மக்கள் அதிகமாகக் கூடும் பல்வேறு இடங்கள் நடத்திட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
     இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் டாக்டர் பி.சந்திரமோகன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஜி. கோவிந்தராஜன், கூடுதல் மாவட்ட தேர்தல் அலுவலர் ஆசியா மரியம், துணை ஆணையர் ஆர்.கண்ணன், தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வி. குமாரவேல் பாண்டியன், டாக்டர் எம் வீரப்பன், மற்றும் உதவி ஆணையர் வீரப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
     
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai