Enable Javscript for better performance
அவசர உதவி எண்கள்! சென்னை மாநகராட்சி அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    வர்தா புயலில் பாதிக்கப்பட்டோர் தொடர்புகொள்ள அவசர உதவி எண்களை சென்னை மாநகராட்சி அளித்துள்ளது. பாதிப்பு அல்லது அவசர உதவிகள் இருப்பின் பொதுமக்கள் புகார் அளிக்க கட்செவி அஞ்சல், தொலைபேசி, மின்னஞ்சல் முகவரிகள் ஆகியவை சென்னை மாநகராட்சி கட்டுப்பாட்டு அறையுடன் இணைத்து வெளியிட்டுள்ளது.
    பொதுமக்கள் தங்கள் புகார்களை பெருநகர சென்னை மாநகராட்சி மூலம் அமைக்கப்பட்டுள்ள 24 மணிநேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் தொடர்புகொள்ளலாம். அதன்படி, 044-25619206, 25619511, 25384965, 25383694, 25367823, 25387570 ஆகிய தொலைபேசி எண்களிலும், 9445477207, 9445477203,9445477206, 9445477201, 9445477205 ஆகிய கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) எண்களிலும் தொடர்புகொள்ளலாம்.
    அதுபோல், gccdm1@chennaicorporation.gov.in,

    gccdm2@chennaicorporation.gov.in,

    gccdm3@chennaicorporation.gov.in,

    gccdm4@chennaicorporation.gov.in,

    gccdm5@chennaicorporation.gov.in   ஆகிய மின்னஞ்சல் வழியாகவும் புகாரைப் பதிவு செய்யலாம். இதன்மூலம் பெறப்படும் புகார்களை சம்பந்தப்பட்ட மண்டலங்களுக்கு அனுப்பி உடனடி நடவடிக்கை மேற்கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. மீட்புப்பணி குறித்த தகவல்களை உடனுக்குடன் அனைத்து அலுவலர்களுக்கும் தெரிவிக்க வயர்லெஸ் கருவிகள் வழங்கப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai