Enable Javscript for better performance
சென்னையில் இன்று கடவுச்சீட்டு சிறப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    சென்னை மண்டல கடவுச்சீட்டு (பாஸ்போர்ட்) அலுவலகம் சார்பில் கடவுச்சீட்டு பயனாளிகளுக்கான சிறப்பு முகாம் சனிக்கிழமை நடைபெறவுள்ளது.
     தாம்பரம், சாலிகிராமம், அமைந்தகரை உள்ளிட்ட சேவை மையங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. சுமார் 2,000 விண்ணப்பதாரருக்கு நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
     சாலிகிராமத்தில் நடைபெறும் முகாமை பிரிட்டிஷ் துணைத் தூதர் பாரத் ஜோஷி தொடக்கி வைக்கவுள்ளார்.
     கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடத்தப்பட்ட முகாம்கள் மூலம் 1,790 விண்ணப்பதாரர்கள் பலன் அடைந்தனர் என மண்டல கடவுச்சீட்டு அலுவலர் கே.பாலமுருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளார்.
     
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai