Enable Javscript for better performance
சென்னையில் பெரும்பாலான ஏ.டி.எம்-கள் செயல்படவில்லை- Dinamani

சுடச்சுட

    

    சென்னையில் விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமையும் பெரும்பாலான ஏ.டி.எம்-கள் செயல்படாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டனர்.
    பழைய ரூ. 500, 1000 நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்ததைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பொதுமக்கள் பணம் எடுக்க முடியாமல் கடுமையாக பாதிக்கப்பட்டனர். மேலும், வங்கிகள் மற்றும் ஏ.டி.எம். மையங்களிலும் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்யவும், மாற்றி பணம் எடுக்கவும் மக்கள் கூட்டம் அலைமோதியது.
    இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் சென்னையில் பெரும்பாலான ஏடி.எம்-கள் செயல்படவில்லை. இதில் அண்ணா நகர், பிராட்வே, கோயம்பேடு பகுதியில் சில ஏ.டி.எம்-கள் செயல்பட்ட நிலையில் அங்கு பணம் எடுக்க நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்திருந்தனர்.
    அதிலும், ரூ. 100 நோட்டுகள் மிகவும் பழையதாகவும், கிழிந்த நிலையிலும் இருந்தன. ஏ.டி.எம்-களில் ரூ. 500 நோட்டுகள் போதுமான அளவு இல்லாததால் ரூ. 2000 நோட்டுகளே மீண்டும் எடுக்க வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதனால் சில்லரை தட்டுப்பாடு ஏற்படுகிறது.
    எனவே, போதுமான அளவு ரூ. 100, 50, புதிய ரூ. 500 நோட்டுகள் புழக்கத்தில் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தெரிவித்தனர்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai