Enable Javscript for better performance
தார்ப்பாயை மூடாமல் செல்லும்  மணல் லாரிகளால் விபத்து அதிகரிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தார்ப்பாயை மூடாமல் செல்லும்  மணல் லாரிகளால் விபத்து அதிகரிப்பு

    By DIN  |   Published on : 28th November 2016 03:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    செங்குன்றம் பகுதியில் தார்ப்பாயை மூடாமல் செல்லும் மணல் லாரிகளால் விபத்துகள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    செங்குன்றம், அலமாதி, எடப்பாளையம், சோழவரம், காரனோடை உள்ளிட்ட பகுதிகளில் இருந்து லாரிகள் மூலம் ஆற்று மணல், சவுடுமண், செங்கல் ஆகியவை சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு எடுத்து செல்லப்படுகின்றன.
    இதுபோன்று நாள்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட லாரிகள் சென்று வருகின்றன. இவற்றின் மேற்புறத்தில் தார்ப்பாய் போட்டு மூடப்படுவதில்லை. இதனால், லாரியில் உள்ள மணல் காற்றில் பறந்து, பின்னால் வரும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களில் விழுகிறது.
    இதனால் நிலைகுலைந்து அவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கும் சம்பவங்கள் நிகழ்கின்றன.
    எனவே, இருசக்கர வாகன ஓட்டிகளின் நலன் கருதி, வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள், போக்குவரத்து காவல் துறையினர், மணல் லாரிகளை கண்காணித்து விதிகளை மீறி தார்ப்பாய் போடாமல் சென்றால், அபராதம் விதிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai