Enable Javscript for better performance
பள்ளி மாணவர்களுக்கு பல் மருத்துவப் பரிசோதனை முகாம்- Dinamani

சுடச்சுட

    

    சென்னையை அடுத்த உத்தண்டி ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரி சமூக மருத்துவத் துறை சார்பில் குரோம்பேட்டை விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப் பள்ளியில் இலவச பல் மருத்துவப் பரிசோதனை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.
    இதில் பங்கேற்ற 3000 மாணவ, மாணவியர்களில் சுமார் 30 சதவீதம் பேர் பல் சொத்தை, மஞ்சள் கறையுடன் வாய்நாற்றம் ஆகிய பிரச்னைகளால் பாதிக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது.
    பிரஷ் பயன்படுத்தி பல் துலக்குவது, காலை ஒருமுறை மட்டுமல்லாமல் இரவு உணவுக்குப் பின்னும் பல் துலக்குவது உள்ளிட்ட சுகாதார அறிவுரைகள் வழங்கப்பட்டன.
    பல், வாய் தொடர்பான குறைபாடுகள் உள்ள மாணவர்களுக்கு ராகாஸ் பல் மருத்துவக் கல்லூரியில் இலவச மருத்துவ சிகிச்சைக்கான அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai