Enable Javscript for better performance
மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு:பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    மாணவர்களுக்கு சுகாதார விழிப்புணர்வு:பள்ளிகளுக்கு அறிவுறுத்தல்

    By DIN  |   Published on : 28th November 2016 03:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பள்ளி மாணவர்களுக்கு சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.
    இது தொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் அலுவலகம் அனுப்பியுள்ள கடித விவரம்:-
    மாணவர்களிடையே சுத்தம், சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் தினமும் காலையில் வழிபாடு கூட்டத்தில் சுத்தம், சுகாதாரம் குறித்த கூற்றுகளைப் பேச வைக்கவேண்டும்.
    சுகாதாரம் குறித்த பேச்சுப் போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி, தனி நடிப்புப் போட்டிகள் நடத்தி தூய்மை பற்றி அறியச் செய்யவேண்டும். திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழிக்கக் கூடாது என அறிவுறுத்த வேண்டும். கை கழுவுதலின் உள்பட பல்வேறு சுகாதார பழக்கங்களின் அவசியத்தினை மாணவர்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும்.
    இது தொடர்பாக அனைத்துப் பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai