Enable Javscript for better performance
எஸ்.ஆர்.எம். சட்டக் கல்லூரியில் மகளிர் உரிமை கருத்தரங்கு- Dinamani

சுடச்சுட

    

    எஸ்.ஆர்.எம். சட்டக் கல்லூரியில் மகளிர் உரிமை கருத்தரங்கு

    By DIN  |   Published on : 08th October 2016 04:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    srm

    எஸ்.ஆர்.எம்.சட்டக் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்க மலர் வெளியீட்டு விழாவில்(இடமிருந்து) துறைத் தலைவர் ப்ரீத்தி, சென்னை உயர் நீதிமன்ற வழக்குரைஞர் அஜீதா, கல்லூரி முதல்வர் என்.பாலு, சென்னைப் பல்கலைக்கழ

    சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள எஸ்.ஆர்.எம். சட்டக்கல்லூரியில் "பெண்களின் உரிமை பாதுகாப்பில் சிக்கல்களும், சவால்களும்' என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    கருத்தரங்கில், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவுகளைத் தொடர்ந்து ஏற்பட்ட தாராளமயம், உலகமயம் ஆகியவற்றில் மகளிரின் பங்களிப்பு, அவர்ககள் எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்தும் விவாதம் நடைபெற்றது.
    இணையதளம் தொடர்பான குற்றங்கள், பாலியல் தேர்வு மற்றும் இனப்பெருக்க உரிமைகள், ஆலயப் பிரவேச உரிமைகள், பெண்கள் மீதான வன்முறை மற்றும் கடத்தல் ஆகியவை குறித்த துணைக் கருத்துரை விவாதம், திறனாய்வு ஆகியவையும் நடைபெற்றன.
    விழாவில், அகில இந்திய அளவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவிகள் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai