Enable Javscript for better performance
"தமிழர் மரபு சார்ந்த தானியங்கள் மீட்டெடுப்பு'- Dinamani

சுடச்சுட

    

    தமிழர் மரபு சார்ந்த பாரம்பரிய தானிய வகைகளை மீட்டெடுக்கும் பணியை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநர் கோ.விசயராகவன் கூறினார்.
    சென்னை பல்கலை. தமிழ் இலக்கியத் துறை, உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆகியன இணைந்து தமிழர் மரபு உணவு வகை குறித்த சிறப்புக் கருத்தரங்கை சென்னையில் வெள்ளிக்கிழமை நடத்தின.
    இதில், கோ.விசயராகவன் பேசியது:-
    மரபு சார்ந்த உணவு வகைகள் தமிழர்களின் பழக்க வழக்கங்கள், பண்பாடுகளின்படி அமைந்திருந்தன. அப்போது நடைபெற்ற சடங்குகளில் பொழுது, காலத்துக்கு ஏற்ற உணவு வகைகளை தயாரித்து பரிமாறினர். அந்த உணவுகள் உடலுக்கு மட்டுமின்றி உள்ளத்தின் வளர்ச்சிக்கும் ஏற்ற வகையில் அமைந்தன.
    மக்கள் மறந்துபோன பாரம்பரிய உணவு தானியங்களை மீட்டெடுப்பதற்காக தமிழக அரசு உணவு திருவிழாக்களை நடத்தி வருகிறது. இதனால் தமிழர் மரபு சார்ந்த உணவு வகைகள் குறித்த விழிப்புணர்வு மேம்படும் என்றார்.
    சென்னைப் பல்கலை. தமிழ் இலக்கியத் துறை தலைவர் ஒப்பிலா மதிவாணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai