Enable Javscript for better performance
பணி ஓய்வு பெறும் நாளிலேயே பணப் பலன்கள் அளிக்க வலியுறுத்தல்- Dinamani

சுடச்சுட

    

    பணி ஓய்வு பெறும் நாளிலேயே பணப் பலன்கள் அளிக்க வலியுறுத்தல்

    By DIN  |   Published on : 08th October 2016 04:58 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தொழிலாளர்கள் ஓய்வு பெறும் அன்றே வருங்கால வைப்பு நிதி, விடுப்பு சம்பளம், ஓய்வுதியம் உள்ளிட்ட அனைத்து பணப் பயண்களையும் வழங்க வேண்டும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு வலியுறுத்தியது.
    சென்னை மாதவரத்தில் உள்ள சங்க அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற 3-ஆவது மாநாட்டில் மேற்கண்ட கோரிக்கையை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    ஓய்வூதிய திட்டத்தை அரசு ஏற்று நடத்த வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன.
    இதைத் தொடர்ந்து, சங்கத்தின் புதிய தலைவராக எம்.நீலமேகம், செயலராக கே.வீரராகவன், பொருளாளராக ஏ.முத்துக்குமார் உள்பட 21 நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
    முன்னதாக, மாநாட்டுக்கு தலைவர் பி.கோகுல்தாஸ் தலைமை வகித்தார். சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்திரராசன், சங்கத் துணைத் தலைவர் ஏ.அம்பிகாபதி, துணை செயலர்கள் எம்.நீலமேகம், எஸ்.குமாரவேல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai