Enable Javscript for better performance
பெண்ணிடம் 11 பவுன் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    பெண்ணிடம் 11 பவுன் தங்கச் சங்கிலியை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
    திருவல்லிக்கேணி டி.பி. கோயில் தெருவைச் சேர்ந்த ரா.கல்யாணி (55), ஆழ்வார்பேட்டையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
    இவர் வியாழக்கிழமை தனது வீட்டின் அருகே நடைபெற்ற நவராத்திரி பூஜையில் பங்கேற்றுவிட்டு, பந்தலாலா வேணுகோபால தெரு வழியாக நடந்து வந்தார்.
    அப்போது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு மர்ம நபர், கல்யாணி அணிந்திருந்த 11 பவுன் எடையுள்ள 3 தங்கச் சங்கிலிகளை பறித்துக் கொண்டு தப்பியோடினார்.
    புகாரின்பேரில் ஐஸ்ஹவுஸ் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai