Enable Javscript for better performance
மணலி புதுநகர் பட்டாக்கள் காணவில்லையா?- Dinamani

சுடச்சுட

    

    மணலி புதுநகர் பகுதியின் நில ஆவணங்களில் 5 ஆவணங்களை சிஎம்டிஏ தொலைத்துவிட்டதாக புகார் எழுந்துள்ளது.
    கடந்த 1973 -ஆம் ஆண்டில், தமிழக அரசு வீட்டு வசதி திட்டங்களுக்கென 291.91 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அதன்பிறகு, மணலி புதுநகர் வளர்ச்சி பணிகளுக்காக அந்த நிலங்கள் சிஎம்டிஏ-வுக்கு நில ஆவணங்களாக மாற்றப்பட்டன. ஆனால், தற்போது அந்த இடங்களுக்கான ஆவணங்கள் இல்லாததால், காணாமல் போன ஆவணங்களை பெற சிஎம்டிஏ போராடி வருகிறது.
    5 ஆவணங்கள்: தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், மணலி புதுநகர் பகுதியில் 18 நில ஆவணங்களுடன் தனியார் நில உரிமையாளர்களிடமிருந்து நிலத்தை கையகப்படுத்தியது. இதையடுத்து, இந்த நில ஆவணங்கள் வளர்ச்சி பணிகளுக்கென மாற்றப்பட்டது. ஆனால், இந்த 18 நில ஆவணங்களில் 5 நில ஆவணங்கள் தற்போது காணவில்லை எனத் தெரியவந்துள்ளது.
    இதுகுறித்து வீட்டுவசதி வாரிய வட்டாரங்கள் கூறியதாவது:
    காணாமல் போன 5 நில ஆவணங்கள் மிகவும் முக்கியமானவை. ஆனால், சிஎம்டிஏ, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் தான் நில ஆவணங்களை வழங்கவில்லை என குற்றம் சாட்டி வருகிறது. நில ஆவணங்களை வழங்கவில்லை என சிம்டிஏ மிகவும் காலதாமதமாக வாரியத்தை குறை கூறுவது ஏன்?
    மணலி புதுநகர் வீட்டுமனைத் திட்டம்: கடந்த 1984 -ஆம் ஆண்டில் மணலி புது நகரத்துக்கென பல்வேறு திட்டங்கள் தீட்டப்பட்டன. அதன்படி, இடையஞ்சாவடி, சடையன்குப்பம் ஆகிய கிராமங்களின் சமூக நிலையை மேம்படுத்தும் விதமாக, ஒருங்கிணைந்த வீட்டு வசதி அமைப்புத் திட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அதில், 4,236 குடியிருப்பு மனைகள், 11 இடங்களில் சிறுவர் பூங்காக்கள், 17 நிறுவனங்களுக்கான மனைகள், 57 வணிக மனைகள் ஆகியவற்றுக்கு மனைகள் பிரிக்கப்பட்டன. அதேபோல், அப்பகுதியில் பொருளாதாரத்தில் பின்தங்கியாúருக்கு வீடுகள் கட்டிக்கொள்வதற்கும், அதற்கான வீட்டு மனைகளுக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டிருந்தது.
    இந்த நிலையில், மணலி புதுநகர் வளர்ச்சி மனை திட்டத்துக்கான நில ஆவணங்களை சிஎம்டிஏ, வருவாய் துறை ஆகியவைதான் வழங்கியிருக்க வேண்டும். மேலும், வீட்டு மனைகளுக்கு சிஎம்டிஏ விற்பனை பத்திரமும் வழங்கியுள்ளது.
    பட்டா நிலமாக மாற்றியது யார்?: இந்த நிலையில், மணலி புதுநகர் கிராமத்தில் பட்டா நிலங்கள் இல்லை என அப்பகுதியினருக்கு தெரியவந்தது. இதையடுத்து, வீட்டுமனை பெற்றவர் ஒருவர் இழப்பீடு வழங்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளார். ஆனால், அந்த நிலங்கள் புறம்போக்கு நிலமா அல்லது பட்டா நிலமா எனத் தெரிய வேண்டும்; அதோடு இந்த நில ஆவணங்கள் குறித்து பல்வேறு முரணான தகவல்கள் இருக்கிறதே என கேள்விகள் எழுந்தன.
    ஆனால், கிராம பதிவேட்டின்படி அந்த நிலங்கள், பட்டா நிலம்தான் என நன்கு தெரிகிறது. அந்த வகையில் புறம்போக்கு நிலத்திலிருந்து பட்டா நில ஆவணங்களாக சிஎம்டிஏ -தான் மாற்றியுள்ளது. ஆனால், தற்போது 18 நில ஆவணங்களில் 5 நில ஆவணங்கள் (பட்டா) காணாமல் போனதெப்படி? இதற்கு, சிஎம்டிஏ -தான் பொறுப்பேற்க வேண்டும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai