Enable Javscript for better performance
மருத்துவர் மீதான வழக்குகளை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவர் மீதான வழக்குகளை ரத்து செய்ய நீதிமன்றம் மறுப்பு

    By DIN  |   Published on : 08th October 2016 04:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மோசடி வழக்கில், மருத்துவர் மீதான வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
    சென்னை மயிலாப்பூரில் மருத்துவமனை ஒன்றை நடத்தி எந்த நோயையும் குணப்படுத்திவிடுவதாக பல லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக, டாக்டர் விஜயகுமார், அவரது மகள், மருமகன் மீது சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் பல வழக்குகளைப் பதிவு செய்தனர்.
    இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி, விஜயகுமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி பிறப்பித்த
    உத்தரவு:
    வசூலித்த பணத்தைத் திருப்பிக் கொடுத்து விட்டதால், செய்த மோசடியை அழித்து விட முடியாது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மோசடி குற்றச்சாட்டுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய முடியாது. வழக்குகளின் விசாரணையை போலீஸார் விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai