Enable Javscript for better performance
மழை நீர் வடிகால் அமைக்கும் பணிகள் தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    மழை நீர் வடிகால்கள் அமைக்கும் பணிகளை மாநில நெடுஞ்சாலைத் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் கடந்தாண்டு வட கிழக்குப் பருவமழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. நெடுஞ்சாலைகளில் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால், அந்தச் சாலைகள் சேதமடைந்ததோடு, குடியிருப்புப் பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டன. இதையடுத்து, நெடுஞ்சாலைகளில் மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகள் கண்டறியப்பட்டன. தாழ்வான பகுதிகளில் ஆக்கிரமிப்புகளால் மழை நீர் வெளியேறுவது தடைப்பட்டது. அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அத்துடன், தாழ்வான பகுதிகளை வடிகால்களுடன் இணைத்து, அடையாறு, கூவம், கொசஸ்தலை உள்ளிட்ட முக்கிய ஆறுகள் வழியாக மழை நீர் செல்வதற்கு ஏதுவாக இணைப்புக் கால்வாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
    ரூ. 35 கோடியில் பணிகள்: சாலைகள் சீரமைப்பு, சிறு வடிகால் குழாய்கள் பொருத்துதல், சிறு பாலங்கள் அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் ரூ. 35 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களிலும் அவசர கால அடிப்படையில், இந்த வடிகால் இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, வேளச்சேரி-எஸ்ஆர்பி டூல்ஸ் இணைப்புச் சாலை, தாம்பரம்- கோமங்கலம் சாலை, வேளச்சேரி- தாம்பரம் சாலை, செந்நீர்க்குப்பம்- பூந்தமல்லி சாலை, வானகரம்- அம்பத்தூர் சாலை உள்ளிட்ட 13-க்கும் மேற்பட்ட நெடுஞ்சாலைகளுக்கு உள்பட்ட பகுதிகளில், மழை நீரை வெளியேற்றுவற்கான வடிகால் இணைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    இந்த மாத இறுதிக்குள் இந்தப் பணிகள் அனைத்தும் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai