Enable Javscript for better performance
மாடியில் இருந்து விழுந்த மாணவி சாவு- Dinamani

சுடச்சுட

    
    girl

    பள்ளியின் 5ஆவது மாடியில் இருந்து கீழே விழுந்து மாணவி இறந்தார்.

    சூளைமேடு பெரியார் பாதையைச் சேர்ந்த பெட்டிக்கடைக்காரர் இளங்கோவன் மகள் லோகமித்ரா (9), தியாகராய நகர் வீராசாமி தெருவில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
    மூன்றாவது மாடியில் உள்ள வகுப்பறையில் இருந்து வெள்ளிக்கிழமை நண்பகல் கழிவறைக்கு செல்ல வெளியே வந்த அவர், மொட்டை மாடியான 5ஆவது மாடிக்குச் சென்றுள்ளார். அப்போது, திடீரென அவர் அங்கிருந்து கீழே விழுந்தார்.
    பலத்த காயமடைந்த அவர், வடபழனி 100 அடி சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்தார்.
    சம்பவ இடத்தை காவல் இணை ஆணையர் அன்பு, துணை ஆணையர் சரவணன், உதவி ஆணையர் ஹரிக்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
    இதுதொடர்பாக அசோக் நகர் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai