Enable Javscript for better performance
விபத்தில் இளைஞர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    விபத்தில் இளைஞர் இறந்தார். சென்னை காசிமேட்டைச் சேர்ந்த மதிவாணன் மகன் ராகேஷ் (17), தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார்.
    இவர் தனது நண்பர் நவீனுடன் மோட்டார் சைக்கிளில் வியாழக்கிழமை காசிமேடு சிக்னல் அருகே சென்றார். அப்போது, முன்னால் சென்ற ஆட்டோ திடீரென நின்றது. அப்போது அதன் மீது மோதாமல் இருக்க வாகனத்தை நிறுத்தியபோது, திருவொற்றியூரில் இருந்து திருவான்மியூர் நோக்கி சென்று கொண்டிருந்த அரசுப் பேருந்து மோதியது. இதில் பலத்த காயமடைந்த ராகேஷ் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
    அங்கு சிறிது நேரத்தில் ராகேஷ் இறந்தார்.
    புகாரின்பேரில் காசிமேடு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் நிலைய ஆய்வாளர் செல்வக்குமார் வழக்குப் பதிந்து விசாரித்துவருகிறார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai