Enable Javscript for better performance
வேலை வாங்கித் தருவதாக மோசடி: பிகார் இளைஞர்கள் மூவர் கைது- Dinamani

சுடச்சுட

    

    வேலை வாங்கித் தருவதாக மோசடி: பிகார் இளைஞர்கள் மூவர் கைது

    By DIN  |   Published on : 08th October 2016 04:27 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வேலை வாங்கித் தருவதாகக் கூறி பணமோசடியில் ஈடுபட்டதாக பிகார் மாநில இளைஞர்கள் 3 பேரை போலீஸார் கைது செய்தனர்.
    அண்ணா சதுக்கம் போலீஸார் வியாழக்கிழமை இரவு மெரீனா கடற்கரைப் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் மோட்டார் சைக்கிள்களில் வந்த 3 பேரிடம் போலீஸார் விசாரணை செய்தனர்.
    விசாரணையில் அவர்கள், பிகார் மாநிலத்தைச் சேர்ந்த சந்தோஷ்குமார் (27), தர்மேந்தர் (30), ராஜ்குமார் (26) என்பது தெரிய வந்தது. மேலும் இவர்கள் சென்னைக்கு வேலை தேடி வரும் வடமாநில இளைஞர்களிடம் வேலை வாங்கித் தருவதாக கூறி, பண மோசடியில் ஈடுபடுவதும் தெரியவந்தது.
    இதையடுத்து போலீஸார் அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 2 மோட்டார் சைக்கிள், 52 செல்லிடப்பேசிகள், 2 மடிக்கணினிகள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டன.
    மேலும் இதுதொடர்பாக போலீஸார் அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்தனர். இதில் அவர்களுக்கு பல்வேறு திருட்டு வழக்குகளில் தொடர்பு இருப்பதும் தெரியவந்துள்ளதாம். இதுதொடர்பாகவும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai