Enable Javscript for better performance
அரசுப் பேருந்தில் பெண்ணிடம் திருட்டு: இளைஞர் விரட்டிப் பிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    அரசுப் பேருந்தில் பெண்ணிடம் திருட்டு: இளைஞர் விரட்டிப் பிடிப்பு

    By DIN  |   Published on : 15th October 2016 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அரசு பேருந்தில் பெண்ணிடம் பணப் பையை திருடிய இளைஞரை பொதுமக்கள் விரட்டிப் பிடித்து, போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.
    வேளச்சேரி திரௌபதி அம்மன் கோயில் 1ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ஏ.குப்பம்மாள் (33). இவர் வியாழக்கிழமை வேளச்சேரியில் இருந்து கிண்டிக்கு அரசு பேருந்தில் வந்து கொண்டிருந்தார். கிண்டி காந்தி மார்க்கெட் அருகே குப்பம்மாள் வைத்திருந்த பணப் பையை இளைஞர் பறித்துக் கொண்டு தப்பியோடினார்.
    உடனே பேருந்தில் இருந்த பயணிகளும் பொதுமக்களும் இளைஞரை விரட்டிப் பிடித்தனர். பின்னர் அவரை போலீஸாரிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் அவர், சித்தாலப்பாக்கம் வள்ளுவர்நகர் மூன்றாவது தெருவைச் சேர்ந்த வ.மதனகோபால் (37) என்பது தெரியவந்தது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai