Enable Javscript for better performance
ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    ஓய்வு பெற்ற ராணுவ அதிகாரி வீட்டில் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    நந்தம்பாக்கம் டிபன்ஸ் காலனியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (65). இவர் ராணுவ அதிகாரியாகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் தனது மனைவியுடன் வசிக்கிறார். அவர் மகன்கள் வெளிநாட்டில் வசிக்கின்றனர்.
    இந்த நிலையில் சுப்பிரமணி வியாழக்கிழமை இரவு தனது மனைவியுடன் வீட்டில் ஒரு அறையில் தூங்கினார்.
    இதற்கிடையே வெள்ளிக்கிழமை காலை அவர் எழுந்தபோது, வீட்டின் முன் கதவு பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த 30 பவுன் தங்கநகை, ரூ.20 ஆயிரம் பணம் ஆகியவை திருடப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.புகாரின்பேரில் நந்தம்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai