Enable Javscript for better performance
கிருஷ்ணா நதி நீர் திறப்பு: கால்வாய் பராமரிப்புப் பணி தீவீரம்- Dinamani

சுடச்சுட

    

    கிருஷ்ணா நதி நீர் திறப்பு: கால்வாய் பராமரிப்புப் பணி தீவீரம்

    By DIN  |   Published on : 15th October 2016 02:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கண்டலேறு அணையில் இருந்து கிருஷ்ணா நதி நீர் திறக்கப்பட்டுள்ளதால், கிருஷ்ணா நதி கால்வாயைச் சீரமைக்கும் பணியை தமிழக பொதுப்பணித் துறை தீவிரப்படுத்தியுள்ளது.
    ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து கிருஷ்ணா நதிநீர் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. முதல் கட்டமாக 200 கன அடிநீர் திறக்கப்பட்டு, தற்போது 500 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, ஆயிரம் கனஅடி நீர் வரை திறக்கப்பட உள்ளது.
    இந்த நிலையில், கிருஷ்ணா நீர் தமிழக எல்லைப்பகுதியான ஊத்துக்கோட்டையை சனிக்கிழமை வந்தடையும் என்றும் பூண்டி ஏரி நீர்தேக்கத்துக்கு ஞாயிற்றுக்கிழமை வந்து சேரும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து, நீர் விரைந்து வந்து சேரும் வகையில் அடைப்புகளை அகற்றி கால்வாய்ப் பகுதிகளைச் சீரமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
    இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் கூறியதாவது:-
    கால்வாய் பகுதிகளிலும், பூண்டி நீர்தேக்கத்திலும் பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. பூண்டி ஏரியில் நீரின் அளவு குறைந்து காணப்படுகிறது. கிருஷ்ணா நதி நீர் வந்தவுடன் நீரின் அளவு உயரும்.
    எனவே, நீரை வீணாக்காமல் குடிநீருக்குச் சேமிக்க பராமரிப்புப் பணி மேற்கொள்ளப்படுகிறது. கிருஷ்ணா நீரை கரையோர மக்கள் பயன்படுத்தாமல் இருக்க ஆந்திர பொதுப்பணித்துறையிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai