Enable Javscript for better performance
செல்லம்மாள் கல்லூரி அருகே மாநகரப் பேருந்துகள் நிறுத்த ஏற்பாடு- Dinamani

சுடச்சுட

    

    செல்லம்மாள் கல்லூரி அருகே மாநகரப் பேருந்துகள் நிறுத்த ஏற்பாடு

    By DIN  |   Published on : 15th October 2016 03:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    chellamalcollege

    தண்ணீர் லாரி மோதி 3 மாணவிகள் உயிரிழந்ததைத் தொடர்ந்து, சென்னை செல்லம்மாள் கல்லூரி அருகே அந்த வழியாகச் செல்லும் அனைத்துப் பேருந்துகளும் நின்று செல்ல உத்தரவிடப்பட்டுள்ளது.
    இதுகுறித்து கல்லூரி முதல்வர் வி.ஜி.விஜயலட்சுமி கூறியது:
    எங்களது கல்லூரி வாயில் அருகிலேயே பேருந்து நிறுத்தம் உள்ளது. ஆனால், பல மாதங்களாக இந்த நிறுத்தத்தில் எந்தவொரு மாநகரப் பேருந்தும் நிறுத்தப்படவில்லை.
    இதன் காரணமாக, வேகமாக வாகனங்கள் செல்லக்கூடிய இந்த நெடுஞ்சாலையில் மாணவிகள் நடந்தும், கடந்தும் செல்லும் நிலை இருந்து வருகிறது. வியாழக்கிழமை நடந்த விபத்துக்கு
    இங்கு பேருந்துகள் நின்று செல்லாததும் ஒரு முக்கிய காரணம்.
    இப்போது எங்களுடைய கோரிக்கையை ஏற்று, கல்லூரி பேருந்து நிறுத்தத்தில் அனைத்து மாநகரப் பேருந்துகளும் நின்று செல்ல மாநகரப் போக்குவரத்துக் கழகம் உத்தரவிட்டிருக்கிறது. இதற்காக போக்குவரத்துக்கழகம் சார்பில் பேருந்து நிறுத்தத்தில் அறிவிப்புப் பலகை ஒன்றும் வைக்கப்பட்டிருக்கிறது.
    மேலும், நிறுத்தத்தில் பேருந்துகள் நிற்காமல் சென்றால் உடனடியாக தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம் என மாநகரப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர், கல்லூரி நிர்வாகத்துக்கு தெரிவித்துள்ளார்.
    மாணவிகள் இறப்பைத் தொடர்ந்து கல்லூரிக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டது. திங்கள்கிழமை முதல் கல்லூரி வழக்கம்போல செயல்படும்.
    மாணவிகள் அனைவரும், கல்லூரி வாயில் அருகே உள்ள பேருந்து நிறுத்தத்தில்தான் வந்திறங்க வேண்டும் என்பதை கட்டாயப்படுத்த முடிவு செய்துள்ளோம். இதுதொடர்பான அறிவுறுத்தல் அனைத்து மாணவிகளுக்கும் திங்கள்கிழமை வழங்கப்படும்.
    அறக்கட்டளை சார்பில் தலா ரூ. 2 லட்சம்: விபத்தில் உயிரிழந்த மாணவிகளின் குடும்பங்களுக்கு கல்லூரி அறக்கட்டளையான பச்சையப்பன் அறக்கட்டளை சார்பில் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி அளிக்கப்பட்டது. அவர்களின் இறுதிச் சடங்குக்கான செலவையும் அறக்கட்டளை ஏற்றது.
    அறக்கட்டளை நிர்வாகிகள், கல்லூரி நிர்வாகிகள், மாணவிகள் உள்ளிட்டோர் உயிரிழந்த மாணவிகளின் வீடுகளுக்கு வெள்ளிக்கிழமை நேரில் செனறு ஆறுதல் கூறினோம் என்றார் அவர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai