Enable Javscript for better performance
தாய் இறந்த துக்கத்தில் மகள் மாரடைப்பால் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருவொற்றியூரில் தாய் இறந்த துக்கத்தில் மகளுக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.
    திருவொற்றியூர் சாத்துமாநகர் கிராமத் தெருவைச் சேர்ந்தவர் ராணிமேரி(55). இவரது தாயார் ஃபிலோமினா மேரி(75). ராணிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். ராணிமேரியின் கணவர் இறந்த பிறகு நால்வரும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
    இந்நிலையில் உடல்நலக் குறைவு காரணமாக ஃபிலோமினா மேரி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார். இதற்கான இறுதிச் சடங்குகள் புதன்கிழமை நடைபெற்றன. சவ அடக்கத்துக்குப் பிறகு வீட்டுக்கு வந்த ராணிமேரி, தாயார் இறந்த துக்கம் தாளாமல் இரவு முழுதும் தூங்காமல் அழுது கொண்டே இருந்தாராம். இந்நிலையில் வியாழக்கிழமை காலை ராணிமேரிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai