Enable Javscript for better performance
மருத்துவர் வீட்டில் நகைகள் திருட்டு- Dinamani

சுடச்சுட

    

    மருத்துவர் வீட்டில் ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்க, வைர நகைகளைத் திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
    மயிலாப்பூர் தேசிகாச்சாரி தெருவைச் சேர்ந்த மருத்துவர் ராம்மூர்த்தி. இவர் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றுள்ளார். இதனால், அவரது வீட்டில் தாய் ராதா (80) தனியாக வசித்து வருகிறார்.
    இந்த நிலையில், ராதா வெளியூர் சென்றுவிட்டு வெள்ளிக்கிழமை வீடு திரும்பிவந்தபோது, வீட்டில் பூட்டை உடைத்து, பீரோவில் இருந்த ரூ.35 லட்சம் மதிப்புள்ள தங்க,வைர நகைகள், ரூ.10 ஆயிரம் திருடு போனது தெரியவந்தது. புகாரின்பேரில் மயிலாப்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளையும் கைரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai