Enable Javscript for better performance
மாணவி இறந்த சம்பவம்: பள்ளி முதல்வர், நிர்வாகி கைது- Dinamani

சுடச்சுட

    

    மாடியிலிருந்து தவறி விழுந்து மாணவி உயிரிழந்தது தொடர்பாக.
    பள்ளியின் முதல்வர், நிர்வாகி இருவரை போலீஸார் கைது செய்தனர்.
    சென்னை சூளைமேடு பெரியார் பாதையைச் சேர்ந்த பெட்டிக்கடைக்காரர் இளங்கோவன் மகள் லோகமித்ரா (9), தியாகராய நகர் வீராசாமி தெருவில் உள்ள ஒரு தனியார் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் 4-ஆம் வகுப்பு படித்து வந்தார்.
    இவர் கடந்த 7-ஆம் தேதி பள்ளியின் மொட்டை மாடிக்குச் சென்றபோது, அங்கிருந்து தவறி கீழே விழுந்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், அங்கு உயிரிழந்தார்.
    இதுதொடர்பாக அசோக்நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினர். இந்த நிலையில், பள்ளியின் முதல்வர் அமல்ராஜ் (62), நிர்வாகி பார்த்திபன் (34) ஆகிய இருவரை வியாழக்கிழமை கைது செய்தனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai