Enable Javscript for better performance
விதிகளை மீறினால் லாரிகளின் ஒப்பந்தம் ரத்து: குடிநீர் வாரியம் எச்சரிக்கை- Dinamani

சுடச்சுட

    

    விதிகளை மீறினால் லாரிகளின் ஒப்பந்தம் ரத்து: குடிநீர் வாரியம் எச்சரிக்கை

    By DIN  |   Published on : 15th October 2016 03:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    lorr-water

    விதிமுறைகளை மீறும் குடிநீர் லாரிகளின் ஒப்பந்தம் உடனடியாக ரத்து செய்யப்படும் என சென்னை குடிநீர் வாரியம் எச்சரித்துள்ளது.
    கிண்டியில் குடிநீர் லாரி மோதியதில் 3 மாணவிகள் வியாழக்கிழமை இறந்த சம்பவத்தையடுத்து, சென்னையில் குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தில் அதன் நிர்வாக இயக்குநர் விக்ரம் கபூர் தலைமையில் அவசர ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
    இதில், அவர் பேசியதாவது:-
    சென்னையில் ஒப்பந்த அடிப்படையில் 800-க்கும் மேற்பட்ட குடிநீர் லாரிகள் இயக்கப்படுகின்றன. லாரி தொடர்பான அனைத்து ஆவணங்களையும் முறையாக வைத்திருக்கிறார்களா என்பதை வாரிய அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும். தினமும் தண்ணீர் கொண்டு செல்லும் பணியில் தொடர்ந்து ஈடுபடுத்தப்படாமல் சுழற்சி முறையில் ஓட்டுநர்களை பணியமர்த்த வேண்டும்.
    எந்தக் காரணத்தை முன்னிட்டும் கிளீனரை ஓட்ட பயன்படுத்தக் கூடாது. நெரிசல் மிகுந்த பகுதிகளில் செல்லும் போது லாரி யை ஓட்டும் முறை குறித்து தொடர் பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும். லாரியில் முதலுதவிப் பெட்டி கட்டாயமாக இருக்க வேண்டும். விதிமுறைகளை மீறும் லாரிகளின் ஓப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றார்.
    கூட்டத்தில் குடிநீர் வாரிய உயர் அதிகாரிகள், சென்னை குடிநீர் வாரிய டேங்கர் லாரி உரிமையாளர் சங்கங்களின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
    முன்னதாக, சென்னை குடிநீர் வாரிய லாரி ஓட்டுநர்களின் ஆவணங்கள், நடத்தை குறித்து நடைபெற்ற சோதனையில், 15-க்கும் லாரிகளில் போதிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்பட்டது தெரியவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai