Enable Javscript for better performance
3 மாணவிகள் இறந்த வழக்கு: கிளீனர் கைது- Dinamani

சுடச்சுட

    

    சென்னை கிண்டியில் தண்ணீர் லாரி மோதி 3 கல்லூரி மாணவிகள் உயிரிழந்தது தொடர்பான வழக்கில் கிளீனர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:
    சென்னை கிண்டி அண்ணா சாலையில் வியாழக்கிழமை, குடிநீர் லாரி மோதிய விபத்தில் செல்லம்மாள் கல்லூரியைச் சேர்ந்த மாணவிகள் மு.காயத்ரி, சித்ரா, ஆஷாசுருதி ஆகிய 3 பேர் உயிரிழந்தனர். மேலும் மாணவிகள் ஜெயஸ்ரீ, மீனா உள்பட 5 பேர் பலத்த காயமடைந்தனர்.
    இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த, கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார், லாரி ஓட்டுநர் ராஜேந்திரனை உடனடியாக கைது செய்தனர்.
    இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த கிளீனர் மாயக்கண்ணன் (25) வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டார்.
    உடல்கள் ஒப்படைப்பு: இதனிடையே ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருந்த 3 மாணவிகளின் உடல்களும், வெள்ளிக்கிழமை பிரேத பரிசோதனைக்கு பிறகு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவிகளின் உடலுக்கு அவரது தோழிகள், ஆசிரியர்கள் அஞ்சலி செலுத்தினர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai