ஆங்கில வழிப் பள்ளியில் குழந்தையைச் சேர்ப்பதில் பெற்றோரிடையே தகராறு ஏற்பட்டதால் மனமுடைந்த பெண் தற்கொலை செய்துகொண்டார்.
நீலகிரி மாவட்டம், மஞ்சூர் அருகே உள்ள எமரால்டு நேரு நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஜெயகுமார், விவசாயி. இவரது மனைவி மஞ்சுளா (24). இவர்களது மகள் சஞ்சனாவை பள்ளியில் சேர்க்க இருவரும் முடிவு செய்துள்ளனர்.
மஞ்சுளா தனது மகளை ஆங்கிலக் வழிப் பள்ளியில் சேர்க்க விரும்பியுள்ளார். ஆனால், ஜெயகுமார் தமிழ் வழியில் சேர்க்க விரும்பியுள்ளனர். இதுதொடர்பாக இருவருக்கும் கடந்த 3 வாரங்களாக வாக்குவாதம் ஏற்பட்டு வந்துள்ளது.
இதனால் மனமுடைந்த நிலையில் காணப்பட்ட மஞ்சுளா புதன்கிழமை, வீட்டில் பூச்சி மருந்தைக் குடித்துவிட்டார். உறவினர்கள் உடனடியாக அவரை உதகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கிருந்து உயர் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அவரை அனுப்பி வைத்தனர். இருப்பினும் மஞ்சுளா அங்கு உயிரிழந்தார். இதையடுத்து, எமரால்டு காவல் துறையினர் வியாழக்கிழமை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி
வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.