மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி தாக்கப்பட்டதற்கு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை:
அண்மைக்காலமாக இந்திய அரசியலில் தலைதூக்கி வருகின்ற சகிப்பின்மையின் வெளிப்பாடாகவே இந்தத் தாக்குதல் அமைந்துள்ளது. நன்கு திட்டமிட்டுத்தான் யெச்சூரியைத் தாக்கி இருக்கின்றார்கள்.
மகாராஷ்டிரத்திலும், கர்நாடகத்திலும் இதுபோல கருத்து தெரிவித்து வந்த முற்போக்கு சிந்தனையாளர்கள் தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகியோர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர். அந்தக் கொலையாளிகள் கைது செய்யப்படவில்லை. உறுதியான நடவடிக்கைகளும் இல்லை. இதன் விளைவாகவே இத்தகைய வன்முறையாளர்கள் துணிச்சல் பெறுகின்றனர்.
சீதாராம் யெச்சூரி மீதான தாக்குதலை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. அவரைத் தாக்கியவர்களது பின்னணி குறித்து ஆராய வேண்டும். காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும் என வைகோ வலியுறுத்தியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.