டாஸ்மாக் பார் அமைப்பதற்கான ஒப்பந்தப்புள்ளி கோரும் அறிவிப்பை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதுதொடர்பாக, 200 -க்கும் மேற்பட்ட பார் உரிமையாளர்கள் உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தனர். அதில், "கடந்த 2015 அக்டோபர் 27 -ஆம் தேதி உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை பின்பற்றாமல், பார் டெண்டரை டாஸ்மாக் நிர்வாகம் வெளியிட்டிருக்கிறது' எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த மனுக்களை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி ஆர்.மகாதேவன், "வழக்குரைஞர் கே.செல்வராஜ் உள்ளிட்டவர்கள் குறிப்பிட்டுள்ளதுபோல மீண்டும் அதே தவறை டாஸ்மாக் அதிகாரிகள் இப்போதும் செய்திருப்பது தெளிவாகிறது. எனவே, இந்த டெண்டர் அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது.
அதற்கு மாற்றாக, நீதிமன்றம் 2015 -இல் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் புதிய டெண்டர் அறிவிப்பை அதிகாரிகள் வெளியிடவேண்டும். இதற்கான பணிகள் நான்கு வாரங்களுக்குள் முடிக்கப்பட வேண்டும்' என உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.