சென்னை அருகே பள்ளிக்கரணையில் பணத்தை இரட்டிப்பு செய்து தருவதாக மோசடியில் ஈடுபட்ட இருவரை போலீஸார் கைது செய்தனர்.
பாலவாக்கம் கோலவிழியம்மன் நகரைச் சேர்ந்தவர் வி.பாலமுருகன் (38). இவர் பள்ளிக்கரணையில் உள்ள உறவினரை புதன்கிழமை சந்திக்கச் சென்றார். அங்கு அறிமுகமான இருவர், தங்களிடம் ரூ.20 ஆயிரம் முதலீடு செய்தால் 6 மாதத்தில் ரூ.2 கோடி கிடைக்கும் எனக் கூறினராம். இதை நம்பிய பாலமுருகனும் அவரது உறவினரும் அவர்கள் இருவரிடமும் ரூ.40 ஆயிரம் கொடுத்தனர். பணத்தைப் பெற்றுக் கொண்ட இருவரும், சந்தேகத்துக்குரிய வகையில் செயல்பட்டுள்ளனர். இதையடுத்து பாலமுருகன், பள்ளிக்கரணை போலீஸாரிடம் புகார் செய்தார்.
போலீஸார் விசாரணையில் அவர்கள் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை பகுதியைச் சேர்ந்த சு.வெங்கடாஜலபதி (46), சென்னை மேடவாக்கம் ரங்கநாதபுரம் பகுதியைச் சேர்ந்த ரா.கோபால் (57) என்பது தெரியவந்தது.
இருவரும் இரட்டிப்பு செய்து தருவதாக மோசடி செய்யும் எண்ணத்துடன், பணத்தைப் பெற்றிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீஸார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.