சென்னை சிட்லப்பாக்கத்தில் ரூ.500, ரூ.2,000 கள்ள நோட்டுகள் வைத்திருந்த இரு இளைஞர்களை, போலீசார் கைது செய்தனர்.
இதுகுறித்து போலீஸார் தெரிவித்ததாவது:
பல்லாவரம்-துரைப்பாக்கம் சாலையில் புதன்கிழமை இரவு புதிய ரூ.500, ரூ.2,000 கள்ள நோட்டுகளுடன் சந்தேகப்படும் வகையில், இரு இளைஞர்கள் நின்று கொண்டு இருந்தனர்.
இரவு ரோந்துப் பணியில் ஈடுபட்ட சிட்லப்பாக்கம் போலீசார் ராமதுரை, துரை ஆகியோர், அந்த இளைஞர்களிடம் விசாரணை நடத்தியபோது இருவரும் சரியாக பதில் அளிக்கவில்லை.
சந்தேகமடைந்த போலீசார், அவர்கள் வைத்திருந்த கைப்பையை சோதனை செய்தபோது புதிய ரூ.500, ரூ.2,000 கள்ள நோட்டுகள் இருந்தன. அவற்றின் மதிப்பு ரூ.5,500. மேலும், அவர்களிடம் ரூ.6,000 மதிப்பிலான செல்லத்தக்க புதிய ரூ.500 நோட்டுகளும் இருந்தன.
அவற்றை பறிமுதல் செய்த போலீசார், விசாரணைமேற்கொண்டதில் இருவரும் பம்மலை அடுத்த நாகல்கேணி பகுதியைச் சேர்ந்த யூசுப், சுல்தான் என்று தெரிய வந்தது. சிட்லப்பாக்கம் போலீசார் இருவரையும் கைது செய்து, அவர்களிடம் கள்ள நோட்டுகள் எப்படி கிடைத்தது என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.