சென்னை கொடுங்கையூரில் குப்பை லாரி மோதி, சென்னை மாநகராட்சி ஊழியர் இறந்தார்.
சென்னை கொருக்குப்பேட்டை முத்தமிழ் நகரைச் சேர்ந்த சந்திரசேகர் (54), சென்னை மாநகராட்சியின் மெக்கானிக் பிரிவு ஒப்பந்த ஊழியர். கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் பொக்லைனைப் பழுது நீக்கும் பணியில் வியாழக்கிழமை காலை ஈடுபட்டிருந்தார்.
பழுதை நீக்கிய பின், குப்பைக் கிடங்கின் எதிரே உள்ள உணவகத்தில் காலை உணவு அருந்தினார்.
மீண்டும் குப்பை கிடங்குக்குச் செல்லும்போது, பேசின்பாலத்தில் இருந்து குப்பைக்கிடங்கை நோக்கி வந்த குப்பை லாரி திடீரென சந்திரசேகர் மீது மோதியதில் அவர் உயிரிழந்தார். கீழ்ப்பாக்கம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, லாரியை ஓட்டி வந்த எருக்கஞ்சேரியைச் செந்தில்குமாரை (34) கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.