கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு இதுவரை 16,427 பேர் இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
கால்நடை மருத்துவம் - கால்நடை பராமரிப்பு (பிவிஎஸ்சி மற்றும் ஏவி), பால்வளத் தொழில்நுட்பம் உள்ளிட்ட கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கு பிளஸ் 2 தேர்வு மதிப்பெண் அடிப்படையில் கலந்தாய்வு நடத்தி, மாணவர் சேர்க்கை நடைபெறு உள்ளது. இந்தப் படிப்புகளுக்கு ஜ்ஜ்ஜ்.ற்ஹய்ன்ஸ்ஹள்.ஹஸ்ரீ.ண்ய் என்ற இணையதளத்தில் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
கால்நடை மருத்துவம் மற்றும் தொழில்நுட்பப் படிப்புகளுக்கு 16,427 பேர் இதுவரை இணையதளத்தில் பதிவு செய்துள்ளனர்.
பதிவு செய்த விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து அனுப்ப ஜூன் 7 கடைசி தேதியாகும்.
விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு ஜூன் 30 -ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படும். முதற்கட்ட கலந்தாய்வு ஜூலை 19, 20, 21 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளது.
புதிய பாடத்திட்டம்: கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கு இந்த ஆண்டு முதல் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. இந்தப் பாடத்திட்டத்தின்படி கால்நடை மருத்துவ அறிவியல் படிப்புக்கான காலம் 6 மாதம் அதிகரிக்கப்பட உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.