தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (டிஎன்பிஎஸ்சி) குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளன.
இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ.அன்புச்செல்வன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்தும் குரூப் 2 (நேர்முகத் தேர்வு இல்லாத) போட்டித்தேர்வுக்கான இலவச முன் ஆயத்த பயிற்சிகள் வகுப்புகள் நடைபெற உள்ளன. சாந்தோமில் உள்ள சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் 3 ஆவது தளத்தில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பயிற்சி வகுப்புகள் நடைபெறும். இலவச பயிற்சியில் கலந்துகொள்ள விரும்புகிறவர்கள் அலுவலக நேரங்களில் மேற்கண்ட முகவரியில் வேலைவாய்ப்புப் பதிவு அடையாள அட்டை மற்றும் உரிய கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் தொடர்பு கொண்டு பயன்பெறுமாறு அந்த செய்திக்குறிப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.