சுடச்சுட

  

  அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் ஹெபடைடிஸ் விழிப்புணர்வுப் பேரணி

  By DIN  |   Published on : 29th July 2017 03:17 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  girls

  சென்னை கல்லீரல் அறக்கட்டளை, பஞ்சாப் சங்கம் மற்றும் அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி ஆகியவை இணைந்து வெள்ளிக்கிழமை நடத்திய ஹெபடைடிஸ் பாதிப்பு விழிப்புணர்வுப் பேரணியில் பங்கேற்ற மாணவிகள்.

  சென்னை அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரியில் ஹெபடைடிஸ் விழிப்புணர்வு பேரணி வெள்ளிக்கிழமை (ஜூலை 28) நடைபெற்றது.
  சென்னை கல்லீரல் அறக்கட்டளை, பஞ்சாப் சங்கம் மற்றும் அண்ணா ஆதர்ஷ் மகளிர் கல்லூரி ஆகியவை இணைந்து இந்தப் பேரணியை நடத்தின. இந்தப் பேரணியில் 500 }க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்றனர்.
  பேரணியைத் தொடர்ந்து அறக்கட்டளையின் நிறுவனர் டாக்டர் ஆர்.பி.சண்முகம்
  கூறியது:
  ஹெபடைடிஸ் என்பது கல்லீரலில் ஏற்படும் அழற்சியாகும். உலக அளவில் 4 கோடி பேருக்கு இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் 14 லட்சம் பேர் இதனால் உயிரிழக்கின்றனர்.
  2013 -ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி உலக அளவில் மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் ஹெபடைடிஸ் ஏழாவது இடத்தில் உள்ளது. எய்ட்ஸ், காசநோய் மற்றும் சாலை விபத்துகளால் ஏற்படும் மரணத்தைக் காட்டிலும் இது அதிகமாகும்.
  ஹெபடைடிஸ் பாதிப்புக்குள்ளாவோருக்கு பெரும்பாலும் அறிகுறிகள் தென்படாது.
  எனினும் மஞ்சள் காமாலை, அடிவயிற்றில் வலி, பசியின்மை, குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் ஹெபடைடிஸ் பரிசோதனையை மேற்கொள்வது நல்லது என்றார் அவர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai