Enable Javscript for better performance
கேரள முதல்வரை மிரட்டுவதா? பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    கேரள முதல்வரை மிரட்டுவதா? பாஜகவுக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

    By DIN  |   Published on : 18th October 2017 03:00 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கேரள முதல்வர் பினராயி விஜயனை மிரட்டும் வகையில் பாஜக தலைவர்கள் பேசியிருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. 
    இதுதொடர்பாக அக்கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்ட அறிக்கை: 
    தமிழகத்தைச் சேர்ந்த மத்திய இணையமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன், "கேரள முதல்வர் பினராயி விஜயன் கேரள மாநிலத்தைத் தாண்டி வேறு எங்கும் கால் வைக்க முடியாது' என்று பகிரங்கமாக மிரட்டியுள்ளார். 
    தமிழக பாஜக தலைவர் தமிழிசை செüந்தரராஜனும், "பினராயி விஜயன் கேரளத்தை விட்டு வெளியே போக முடியாது' என்று கூறியுள்ளார். மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஒரு முதல்வரை இவ்வாறு மிரட்டுவது முற்றிலும் ஜனநாயக விரோதமானது. இதற்கு மார்க்சிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவிக்கிறது என ஜி.ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai