Enable Javscript for better performance
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வெளிநாட்டு அறிஞர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும்- Dinamani

சுடச்சுட

    

    உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் வெளிநாட்டு அறிஞர்கள் ஆராய்ச்சி மேற்கொள்ள ஆவன செய்ய வேண்டும்

    By DIN  |   Published on : 22nd October 2017 03:42 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    garland

    சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாள் விழாவில் பங்கேற்ற சிலம்பொலி சு.செல்லப்பன், இயக்குநர் முனைவர் கோ.விசயராகவன் உள்ளிட்டோர்.

    வெளிநாடுகளில் உள்ள அறிஞர்கள் சென்னையில் உள்ள உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்துக்கு வருகை தந்து தமிழ் மொழி சார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும் என தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பன் வலியுறுத்தியுள்ளார்.
    உலகத் தமிழாராய்ச்சி நிறுவன நாள் விழா சென்னை தரமணியில் உள்ள வளாகத்தில் சனிக்கிழமை (அக்.21) நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற சிலம்பொலி சு.செல்லப்பன் பேசியது: பிரெஞ்சு கலைக்கழகத்தைப் போன்று தமிழுக்கு ஒரு உயராய்வு மையம் இருக்க வேண்டும் என்பதற்காகவே என மறைந்த முதல்வர் அண்ணாவின் முயற்சியால் உருவானது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம். இந்தியாவின் பிற மொழி மாநிலங்களில் - உலகிலுள்ள பிற நாடுகளில் நடைபெறும் தமிழாராய்ச்சிக்கான மையமாக இந்த அமைப்பு இயங்க வேண்டும் என்பது அடித்தளக் கோட்பாடாகும். 
    இந்த ஆராய்ச்சி நிறுவனத்தில் வெளிநாடுகளில் உள்ள பிறமொழி அறிஞர்கள் வந்து தமிழ் மொழி, சமூகம், தொன்மை, பண்பாடு, கலை ஆகியவை குறித்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ள தமிழக அரசு ஆவன செய்ய வேண்டும். இதன் மூலம் தமிழின் பெருமைகள் பல்வேறு நாடுகளில் உள்ள மக்களைச் சென்றடையும் என்றார் அவர். 
    இதைத் தொடர்ந்து சிறப்பாகப் பணியாற்றிய பேராசிரியர்கள் கௌரவிக்கப்பட்டனர். முன்னதாக தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் ஆற்றி வரும் பணிகள் குறித்து அதன் இயக்குநர் கோ.விசயராகவன் வலியுறுத்திப் பேசினார். 
    இந்த நிகழ்ச்சியில் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் அன்னிதாமசு, கண்காணிப்பாளர் ப.இராசு, பழந்தமிழர் வாழ்வியல் காட்சிக் கூடத்தின் பொறுப்பாளர் ஆ.மணவழகன், பேராசிரியர் பெ.செல்வக்குமார் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai