Enable Javscript for better performance
கவிஞர் மு.மேத்தாவின் மனைவி சையது ராபியா காலமானார்- Dinamani

சுடச்சுட

    

    கவிஞர் மு.மேத்தா மனைவி சையது ராபியா என்கிற மல்லிகா மேத்தா(62) உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் சனிக்கிழமை (அக்.21) காலமானார். 
    இவருக்கு கணவர் மேத்தா, 5 மகள்கள் உள்ளனர். 
    மல்லிகா மேத்தாவின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள அவரது இல்லத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழறிஞர்கள், பாடலாசிரியர்கள், கவிஞர்கள் உள்ளிட்டோர் கவிஞர் மு.மேத்தாவை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அஞ்சலி செலுத்தினர். 
    மல்லிகா மேத்தாவின் உடல் கொட்டிவாக்கத்தில் உள்ள பள்ளிவாசலில் ஞாயிற்றுக்கிழமை (அக்.22) நண்பகல் 12 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai