Enable Javscript for better performance
காவலர் வீரவணக்க நாள்: நினைவுச் சின்னத்தில் டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அஞ்சலி- Dinamani

சுடச்சுட

    

    காவலர் வீரவணக்க நாள்: நினைவுச் சின்னத்தில் டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் அஞ்சலி

    By DIN  |   Published on : 22nd October 2017 03:41 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    homage1

    பணியின் போது உயிரிழந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வீர வணக்க நாளையொட்டி தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள காவலர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய

    காவலர் வீரவணக்க நாளையொட்டி, சென்னையில் காவலர் நினைவுச் சின்னத்தில் டி.ஜி.பி. உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
    ஜம்மு- காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் 1959-ம் ஆண்டு அக்டோபர் 21-ம் தேதி சீன ராணுவத்தினர் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்புப் படையை சேர்ந்த 10 வீரர்கள் மரணம் அடைந்தனர்.
    இந்த வீரர்களின் தியாகத்தைப் போற்றும் வகையில் இந்தியா முழுவதும் அக்டோபர் 21 அன்று காவலர் வீர வணக்க நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதில், ஒவ்வொரு ஆண்டும் பணியின்போது மரணமடைந்த காவலர்கள் தியாகம் நினைவுக்கூரப்பட்டு,அஞ்சலி செலுத்தப்படுகிறது.
    இதில், கடந்த ஆண்டு (2016) செப்டம்பர் முதல் இந்த ஆண்டு ஆகஸ்ட் 31 வரை ஓராண்டு காலத்தில் இந்தியா முழுவதும் பணியின்போது 379 காவலர்கள் வீரமரணமடைந்திருக்கிறார்கள். 
    வீர மரணமடைந்த காவலர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக, சென்னை காமராஜர் சாலையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள நினைவுச் சின்னம் முன்பாக காவல்துறை உயர் அதிகாரிகள் சனிக்கிழமை மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    தமிழக காவல்துறை சட்டம் மற்றும் ஒழுங்கு டி.ஜி.பி., தே.க.ராஜேந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் எம்.கே நாராயணன், முப்படையை சேர்ந்த உயர் அதிகாரிகள் வி.வித்யான்சு, ஸ்ரீ வத்சவா, என்.நாகராஜன், ராஜன் பர்கோத்ரா, சென்னை பெருநகர காவல் ஆணையர் அ.கா.விஸ்வநாதன், சென்னை மாவட்ட ஆட்சியர் வி.அன்புச்செல்வன் மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
    இதனையடுத்து துப்பாக்கி குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டு, உயிர் நீத்த காவலர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் 2 நிமிட மௌன அஞ்சலி அனுசரிக்கப்பட்டது.
    நிகழ்ச்சியில் தீயணைப்புத்துறை இயக்குநர் கே.பி.மகேந்திரன், சென்னை மாநகர போக்குவரத்து ஊழல் தடுப்புப் பிரிவு டி.ஜி.பி. சங்காராம் ஜாங்கிட், மாநில மனித உரிமை ஆணைய டி.ஜி.பி. செ.கி.காந்திராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai