Enable Javscript for better performance
டேங்கர் லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற இறைச்சிக் கடைக்காரர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    டேங்கர் லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற இறைச்சிக் கடைக்காரர் சாவு

    By DIN  |   Published on : 22nd October 2017 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சென்னை பூந்தமல்லி அருகே டேங்கர் லாரி மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற இறைச்சிக் கடை ஊழியர் இறந்தார்.
    இது குறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
    திருச்சியைச் சேர்ந்த மகேந்திரன் (32), சென்னை பூந்தமல்லியில் தங்கியில் இறைச்சிக்கடையில் வேலை செய்து வந்தார். சனிக்கிழமை பூந்தமல்லி - ஆவடி நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் அவர் சென்றார்.
    பூந்தமல்லி தாண்டி செல்லும்போது, பின்னால் வந்த டேங்கர் லாரி திடீரென மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில், மகேந்திரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
    இந்த விபத்து குறித்து தகவலறிந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, மகேந்திரனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து, விபத்தை ஏற்படுத்திய டேங்கர் லாரி ஓட்டுநர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த குமாரை (30) கைது செய்தனர். 
    இதேபோல, மதுரவாயல் - தாம்பரம் புறவழிச்சாலையில் கோவூரில் அதேப் பகுதியைச் சேர்ந்த ராமு (60) என்பவர் வெள்ளிக்கிழமை இரவு கடக்க முயன்றார். அப்போது அங்கு வந்த அடையாளம் தெரியாத வாகனம் ராமு மீது மோதியது. இந்த விபத்தில் ராமு உயிரிழந்தார்.
    இது குறித்து பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரிக்கின்றனர்.
    மேலும், சென்னையை அடுத்த கோவிலஞ்சேரியைச் சேர்ந்தவர் முரளி (45). தனியார் நிறுவன காவலாளியான இவர், மாம்பாக்கம் நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் சென்றுக் கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. 
    இதில், மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பலத்த காயமடைந்த முரளி உயிரிழந்தார். இது குறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai