Enable Javscript for better performance
வள்ளலார் ஜெயந்தி தின விழா: மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்குபெற மாணவர்களுக்கு அழைப்பு- Dinamani

சுடச்சுட

    

    வள்ளலார் ஜெயந்தி தின விழா: மாநில அளவிலான கட்டுரைப் போட்டியில் பங்குபெற மாணவர்களுக்கு அழைப்பு

    By DIN  |   Published on : 22nd October 2017 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வள்ளலார் 195-ஆவது ஜெயந்தி தின விழாவையொட்டி 18-ஆவது ஆண்டாக தமிழகத்தில் உள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான கட்டுரைப்போட்டி நடத்தப்படவுள்ளது. 
    இது குறித்து வள்ளலார் அருள்ஜோதி சங்கத்தின் சார்பில் விழாக்குழு அமைப்பாளர் லிங்கம் சின்னச்சாமி சனிக்கிழமை (அக்.21) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
    வள்ளலார் கண்ட சன்மார்க்க நெறிகள்; வள்ளலார், புத்தர், ஏசு, ஷீரடி சாய்பாபா, நபிகள் நாயகம், ரமண மகரிஷிகள்ஆகியோருக்கு உள்ள ஒற்றுமை வேற்றுமைகளை குறிப்பிடுக; இந்து மதத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை அகற்றுவதற்கான வழிமுறைகளை விளக்குக; ஜீவகாருண்யமே மனிதனின் திறவு கோல் ஆகிய தலைப்புகளில் ஒன்றைத் தேர்ந்தெடுத்து 5 பக்கங்களுக்கு குறையாமல் கட்டுரை எழுதப்பட வேண்டும். கட்டுரையில் மாணவரின் வீட்டு முகவரி, தொலைபேசி எண்ணை அவசியம் குறிப்பிட வேண்டும். போட்டியில் பங்குபெறும் அனைவருக்கும் சான்றிதழ்களும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்படும். பரிசளிப்பு விழா நிகழ்ச்சி நிரல், அழைப்பிதல், இடம், தேதி போன்ற விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். 
    கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி விவரம்:- 1. புலவர் நீறணிபவழக்குன்றன், மாவட்ட சன்மார்க்க சங்கம், (ஆலங்காடு) கருவம்பாளையம், திருப்பூர்-4, செல்லிடப்பேசி எண்: 9443144997; 2. புலவர் ராசு (கல்வெட்டு அறிஞர்), 64/3- ஆசிரியர் குடியிருப்பு, டி.பி. காம்ப்ளக்ஸ், ஈரோடு-11, தொலைபேசி எண்: 0424- 2262664; 3. முனைவர் எஸ்.தேவராஜன் ஆசிரியர், 1/5, சி. நியூ ஆனந்தா நகர், பி.என்.புதூர் (அ), கோயம்புத்தூர், செல்லிடப்பேசி: 98427 42564. கொடுக்கப்பட்டுள்ள மூன்று முகவரிகளில் ஏதேனும் ஒரு முகவரியில் மட்டும் மாணவர்கள் தங்களது தலைமை ஆசிரியர் அல்லது முதல்வர் மூலமாக வரும் நவம்பர் 5-ஆம் தேதிக்குள் தங்களது கட்டுரைகளை அனுப்பி வைக்கலாம் என அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai