நான்கு பேருக்கு மறுவாழ்வு அளித்த துப்புரவு பணிப் பெண்

சாலை விபத்தில் பலத்த காயமடைந்த அம்பத்தூரைச் சேர்ந்த பெண் துப்புரவுத் தொழிலாளி ஜெயந்திக்கு (39) மூளைச்சாவு ஏற்பட்டதையடுத்து அவரது கல்லீரல், சிறுநீரகம்
நான்கு பேருக்கு மறுவாழ்வு அளித்த துப்புரவு பணிப் பெண்


சாலை விபத்தில் பலத்த காயமடைந்த அம்பத்தூரைச் சேர்ந்த பெண் துப்புரவுத் தொழிலாளி ஜெயந்திக்கு (39) மூளைச்சாவு ஏற்பட்டதையடுத்து அவரது கல்லீரல், சிறுநீரகம் உள்ளிட்ட உடலுறுப்புகள் தானமாக அளிக்கப்பட்டன. இதற்கான அறுவைச் சிகிச்சை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெற்றது.
அம்பத்தூர் ராம் நகர் குமரன் தெருவில் வசிப்பவர் வேணுகோபால், மனைவி ஜெயந்தி. ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர். ஜெயந்தி அம்பத்தூர் கனரா வங்கியில் துப்புரவுத் தொழிலாளி. கடந்த ஞாயிற்றுக்கிழமை வேணுகோபாலும், ஜெயந்தியும் மோட்டார் சைக்கிளில் சிறுவாபுரி கோயில் சென்றுவிட்டு வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தனர். காரனோடை அருகே சாலையில் இருந்த வேகத்தடையைக் கடக்கும்போது மோட்டார் சைக்கிளின் பின்சீட்டில் அமர்ந்திருந்த ஜெயந்தி தலைகுப்புற கீழே விழுந்து காயமடைந்தார். ஜெயந்தியை அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்து சோதித்தபோது அவருக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது தெரிய வந்தது. செவ்வாய்க்கிழமை ஜெயந்திக்கு மூளைச்சாவு ஏற்பட்டதை மருத்துவர்கள் உறுதி செய்தனர். 
இதனையடுத்து ஜெயந்தியின் உறவினர்களிடம் உடலுறுப்பு தானம் செய்வது குறித்து விளக்கப்பட்டது. இதனையடுத்து ஜெயந்தியின் கல்லீரல் பாலாஜி மருத்துமனை, நுரையீரல் அப்பல்லோ மருத்துமனை, சிறுநீரகங்கள் இரண்டும் ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளுக்குப் பொருத்துவதற்காக அனுப்பி வைக்கப்பட்டதாக ஸ்டான்லி மருத்துவமனை டீன் பொன்னம்பலம் நமச்சிவாயம் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com