Enable Javscript for better performance
இன்று 5 இடங்களில் அம்மா திட்ட முகாம்- Dinamani

சுடச்சுட

    

     

    சென்னை, பிப்.9: சென்னையில் வருவாய்த் துறை சார்பில் அயனாவரம், அமைந்தகரை, புரசைவாக்கம், கிண்டி, வேளச்சேரி ஆகிய 5 வட்டங்களில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது.
    இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் வெ. அன்புச்செல்வன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
    பட்டா மாறுதல், முதியோர் ஓய்வூதியம் உள்ளிட்ட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், வருவாய்த் துறை மூலம் வழங்கப்படும் சான்றிதழ்கள் தொடர்பான கோரிக்கைகள் அம்மா திட்ட முகாமில் தீர்வு செய்யப்படும். சென்னை மாநகராட்சி சுகாதாரத் துறை மூலம் மருத்துவ முகாம், கால்நடை மருத்துவத் துறை மூலம் கால்நடைகளுக்கான மருத்துவ முகாம், குடும்ப அட்டை, குடிநீர் பிரச்னைகள், நிலம் சம்பந்தமான பிரச்னைகள் குறித்த கோரிக்கைகள் குறித்தும் நடவடிக்கை எடுக்கப்படும்.
    முகாம் நடைபெறும் இடங்கள்: அயனாவரம், அகரம், தான்தோன்றி அம்மன் கோயில் அருகில் உள்ள இளநிலை உதவிப் பொறியாளர் அலுவலகம், அரும்பாக்கம், அண்ணா நகர் 1 -ஆவது பிளாக்கில் உள்ள உதவி செயற்பொறியாளர் அலுவலகம், புரசைவாக்கம், வால்டாக்ஸ் ரோட்டில் உள்ள சமூக நலக்கூடம், கிண்டி, கோட்டூர் கார்டன் இணைப்பு சாலையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கம், வேளச்சேரி, தண்டீஸ்வரம் கோயில் குளம் அருகில் உள்ள உதவி செயற் பொறியாளர் அலுவலகம் ஆகிய இடங்களில் இம்முகாம்கள் நடைபெறவுள்ளன.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai