Enable Javscript for better performance
சென்னை மக்களுக்காக சிறப்பு சலுகை: பிஎஸ்என்எல் அறிவிப்பு- Dinamani

சுடச்சுட

    

    சென்னை மக்களுக்காக சிறப்பு சலுகை: பிஎஸ்என்எல் அறிவிப்பு

    By DIN  |   Published on : 09th February 2018 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    இலவச அழைப்பு மற்றும் அதிக டேட்டா வசதி கிடைக்கும் வகையில், சென்னை மக்களுக்காக சிறப்பு சலுகையை பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.
    பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் இலவசமாக அழைக்கும் வசதி பிப்ரவரி 1-ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என்று முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்பிறகு, வாடிக்கையாளர்களின் கோரிக்கையை ஏற்று இவ்வசதி ஏப்ரல் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. 
    அகண்ட அலைவரிசை திட்டங்களில் வெவ்வேறு வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், பிபிஜி கோம்போ அளவற்ற டேட்டா வழங்கப்படுகிறது. 1199, 1495, 1599, 2295 போன்ற திட்டங்களில் அளவற்ற அழைப்பு அளிக்கப்படுகிறது. பெருநகர சென்னை மக்களின் வசதிக்காக அதிக டேட்டா அளவுடன் "பிபிஜி கோம்போ 1091' திட்டம் வழங்கப்பட்டுள்ளது. 
    இதற்கிடையில், குறிப்பிட்ட எண்ணுக்கு 24 மணி நேரமும் இலவசமாக அளவற்ற முறையில் பேசிக்கொள்ளும் வசதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவில் வெவ்வேறு இடங்களில் உள்ள நண்பர்கள், குடும்பத்தினரை இந்தத் திட்டத்தில் இணைத்து கொள்ளமுடியும். ஒரு எண்ணை தேர்வு செய்வதற்கு மாதம் ரூ.21-ம், இரண்டு எண்களை தேர்வு செய்வதற்கு மாதம் ரூ.39-ம், மூன்று எண்களை தேர்வு செய்வதற்கு மாதம் ரூ.49-ம் செலுத்தி இந்த வசதியை பெறலாம். இத்தகவலை சென்னை பிஎஸ்என்எல் செய்திக் குறிப்பு மூலம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai