Enable Javscript for better performance
துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    துப்புரவுத் தொழிலாளியின் குடும்பத்துக்கு ரூ.7.5 லட்சம் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

    By DIN  |   Published on : 09th February 2018 04:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மனிதக் கழிவுகளை அகற்றும் போது உயிரிழந்த துப்புரவு தொழிலாளியின் குடும்பத்துக்கு 7 லட்சத்து 50 ஆயிரம் இழப்பீடாக வழங்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
    கடந்த 2001-ஆம் ஆண்டு சென்னையை அடுத்துள்ள கொட்டிவாக்கம் பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்த போது விஷவாயு தாக்கி நரசிம்மன் உள்ளிட்ட இருவர் உயிரிழந்தனர். கடந்த 2016-ஆம் ஆண்டு இறந்த நரசிம்மனின் மனைவி ஆதிலட்சுமி மாநகராட்சியிடம் முறையிட்டார். இது தொடர்பாக ஆதிலட்சுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க ஆறுமுகத்தின் மகன் ரவிச்சந்திரனுக்கு மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது.
    இந்த நோட்டீûஸ எதிர்த்து ரவிச்சந்திரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், "எனது தந்தை தற்போது உயிருடன் இல்லை. 15 ஆண்டுகள் கழித்து இழப்பீடு வழங்க என்னிடம் கோருவதை ஏற்க முடியாது. எனவே மாநகராட்சியின் நோட்டீûஸ ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரியிருந்தார். 
    இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, சம்பவத்தன்று 3 தொழிலாளர்களும் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் உரிய அனுமதி பெறாமல் மனுதாரரின் வீட்டில் உள்ள கழிவுகளை அகற்றச் சென்றதில் இருவர் பலியாகி உள்ளனர். இதற்கு மனுதாரரும் சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்பும் தான் கூட்டுப் பொறுப்பேற்க வேண்டும். எனவே கணவரை இழந்த ஆதிலட்சுமிக்கு மனுதாரர் ரூ.5 லட்சமும், மாநகராட்சி நிர்வாகம் ரூ.2.50 லட்சமும் என மொத்தம் ரூ.7.50 லட்சத்தை இரண்டு மாத காலத்துக்குள் வழங்க வேண்டும். மேலும் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீட்டுத் தொகையான ரூ.10 லட்சத்தில் இந்த 7.50 லட்சம் போக எஞ்சிய ரூ.2 லட்சத்து 50 ஆயிரத்தைப் பெற ஆதிலட்சுமிக்கு முழு உரிமை உண்டு. அதற்கு இந்த உத்தரவு தடையாக இருக்காது என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai