Enable Javscript for better performance
நாளை குடும்ப அட்டை குறைதீர் முகாம்- Dinamani

சுடச்சுட

    
    ration card

    குடும்ப அட்டைகளில் திருத்தம் மேற்கொள்வதற்கான குறைதீர் முகாம் சனிக்கிழமை (பிப்.10) நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசின் சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு:
    குடும்ப அட்டையில் மாற்றங்கள் செய்தல் மற்றும் பொது விநியோகத் திட்டத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்து தமிழகம் முழுவதும் வட்டங்கள் வாரியாக மக்கள் குறைதீர் கூட்ட முகாம் ஒவ்வொரு மாதமும் நடத்தப்படுகிறது. 
    அதன்படி, சென்னையில் 17 மண்டலப் பகுதிகளில் மக்களின் குறைகளை கேட்டு தீர்வு காணும் வகையில், பிப்ரவரி மாதத்துக்கான மாதாந்திர பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்ட முகாம் அந்தந்த மண்டல உதவி ஆணையர் அலுவலகத்தில் வரும் சனிக்கிழமை (பிப். 10) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறும். 
    குடும்ப அட்டைதாரர்கள் குடும்ப அட்டைகளில் பெயர், முகவரி மாற்றம், திருத்தம் மற்றும் பொது விநியோக திட்ட கடைகளின் செயல்பாடுகள் குறித்தும் பொது விநியோகத் திட்ட பொருள்கள் கிடைப்பது குறித்தும், தனியார் சந்தையில் விற்கப்படும் பொருள்கள் அல்லது சேவைகள் வாங்கும் நுகர்வோர் ஏமாற்றப்படுவது அல்லது குறைகள் இருப்பது குறித்தும் நுகர்வோருக்கு குறைகள் ஏதேனும் இருப்பின் அவற்றை இக்கூட்டத்தில் தெரிவிக்கலாம். இந்தக் குறைகளை விரைந்து தீர்வு செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னையில் உள்ள 17 மண்டல பகுதியில் உள்ள குடும்ப அட்டைதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai