Enable Javscript for better performance
பள்ளி மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்- Dinamani

சுடச்சுட

    

    பள்ளி மாணவர்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம்

    By DIN  |   Published on : 09th February 2018 04:15 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    திருவொற்றியூர் விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு பிரசாரம் போக்குவரத்து போலீஸாரால் வியாழக்கிழமை நடத்தப்பட்டது.
    திருவொற்றியூர் எல்லையம்மன் கோயில் அருகே உள்ள விவேகானந்தா மேல்நிலைப் பள்ளியில் சாலை விழிப்புணர்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. 
    பள்ளியின் தலைமையாசிரியை சுஜாதா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் திருவொற்றியூர் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் இளையராஜா, உதவி ஆய்வாளர்கள் பீட்டர், தென்னரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களின் பெற்றோர்கள் ஹெல்மெட் அணிவதன் அவசியம், சாலை விதிகளை பின்பற்றுதல் மற்றும் வாகனங்களின் காப்பீடுகளை புதுப்பித்தல் உள்ளிட்ட விதிமுறைகள் குறித்து பெற்றோர்களிடம் எடுத்துரைக்கவும், எதிர்காலத்தில் மாணவர்களும் இவற்றை தவறாது கடைப்பிடிக்கமாறும் கேட்டுக் கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai