Enable Javscript for better performance
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் தங்கமணி- Dinamani

சுடச்சுட

    

    புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் தமிழகம் முதலிடம்: அமைச்சர் தங்கமணி

    By DIN  |   Published on : 09th February 2018 02:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    solar

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்று வரும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி குறித்த கண்காட்சியை வியாழக்கிழமை தொடங்கி வைத்துப் பார்வையிட்ட மின் துறை அமைச்சர் தங்கமணி.

    புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளதாக மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் கருவிகளின் கண்காட்சியை அமைச்சர் தங்கமணி வியாழக்கிழமை (பிப்.8) தொடங்கி வைத்தார். இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் கூறியது:
    புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் நாட்டிலேயே தமிழகம் முதலிடத்தில் உள்ளது. ஆண்டுக்கு 10 ஆயிரத்து 798 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 500 மெகாவாட் பிற மாநிலங்களுக்கு வழங்கும் அளவுக்கு நமது மாநிலத்தில் உபரியாக உள்ளது. 
    மின்சார வாரியத்துக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு முறையாக வழங்கி வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்பு உடன்குடி திட்டத்துக்கு ரூ.10 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை மத்திய அரசு கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ந்து வழங்கி வருகிறது. இதில் எந்தவிதமான முறைகேடுகளும் நடைபெறவில்லை. 
    மின்சார வாரிய ஊழியர்களின் போராட்டத்தால் தமிழக மக்களுக்கு பெரிதும் இடையூறுகள் ஏற்படும். 
    ஊழியர்களின் கோரிக்கைகள் குறித்து தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. படிப்படியாக அவர்களது கோரிக்கைகள் பரிசீலிக்கப்பட்டு இந்தப் பிரச்னைக்கு சுமுக முடிவு எட்டப்படும் என்றார். 
    இந்தக் கண்காட்சியில் 250-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அவற்றில் சோலார் பேனல் பாதுகாப்பு, அவற்றை நீண்ட நாள்கள் பாதுகாக்கும் தூய்மை இயந்திரங்கள், மின்னல் தாங்கி, கழிவு ஆற்றல் அடுப்பு உள்பட பல்வேறு கருவிகள், இயந்திரங்கள் இடம்பெற்றுள்ளன. இந்தக் காட்சியை பொதுமக்கள் பிப்.10-ஆம் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் மாலை 6 மணிவரை இலவசமாகப் பார்வையிடலாம் என கண்காட்சியின் ஒருங்கிணைப்பாளர் எஸ்.சண்முகம் தெரிவித்தார்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai