Enable Javscript for better performance
மெரீனாவில் ஆண் குழந்தை சடலம்: போலீஸார் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    சென்னை மெரீனா கடற்கரையில், பிறந்த 4 மாதங்கள் ஆண் குழந்தையின் சடலம் கிடந்ததை அடுத்து அதை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    மெரீனா கடற்கரையில் குடிசை மாற்றுவாரிய குடியிருப்பின் எதிரே கடற்கரையோரம் ஆண் குழந்தை சடலம் கிடந்தது. பிறந்து 4 மாதங்கள் ஆன அக்குழந்தையின் சடலத்தை புதன்கிழமை இரவு கண்ட அப்பகுதியினர் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
    தகவலறிந்த மெரீனா போலீஸார், சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தையின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்துள்ள மெரீனா போலீஸார், குழந்தை யாருடையது. எப்படி இறந்தது என்பது குறித்து தகவல் அறிய விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai