Enable Javscript for better performance
ரயிலில் அடிப்பட்டு முதியவர் சாவு- Dinamani

சுடச்சுட

    

    திருவொற்றியூரில் ரயிலில் அடிப்பட்டு முதியவர் உயிரிழந்தார்.
    திருவொற்றியூர், காலடிபேட்டை வடக்கு மாடவீதியைச் சேர்ந்தவர் அப்பாராவ் (67). இவர் அதிகாலை நேரத்தில் நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இந்நிலையில் வியாழக்கிழமை நடைபயிற்சி சென்ற அப்பாராவ் குறித்த நேரத்தில் வீடு திரும்பவில்லை. இதையடுத்து அவரை குடும்பத்தினர் தேடிச் சென்றனர்.
    திருவொற்றியூர் ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் முதியவர் அடிப்பட்டு இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது. அதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது தலை துண்டாகிய நிலையில் இறந்து கிடந்தது அப்பாராவ் என்பது தெரியவந்தது. தகவல் அறிந்த ரயில்வே போலீஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
    தலை மட்டும் துண்டான நிலையில் கிடந்ததால் அவர் எதிர்பாராமல் ரயிலில் அடிபட்டு இறந்து போனாரா? அல்லது திட்டமிட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து கொருக்குப்பேட்டை ரயில்வே போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai